

சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக செம்மலை, வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 6 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக, பேரவை தலைவர், துணைத் தலைவர் இல்லாத சூழலில் அவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர் கள் பெயரை பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். அதன்படி, ஓ.கே.சின்னராஜ், நரசிம்மன், ராஜன் செல்லப்பா, எஸ்.செம் மலை, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய 6 பேரும் மாற்றுத் தலைவர்களாக அறிவிக்கப் பட்டனர்.