நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் விவகாரம்: மாநகராட்சி அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் விவகாரம்: மாநகராட்சி அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

பாரிமுனை மற்றும் என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பான அவமதிப்பு வழக்கில் 2 பக்க பதில் மனு தாக்கல் செய்த மாநகராட்சி அதிகாரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண் டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

பாரிமுனை மற்றும் என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஏற்கெனவே சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தார். அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி 5-வது மண்டல அதிகாரி தாக்கல் செய்த 2 பக்க பதில் மனுவில், “மொத்தமுள்ள 1,252 நடைபாதை வியாபாரிகளுக்கு வடக்கு கோட்டை ரோடு, ராஜா அண்ணாமலை மன்றம், ப்ரேஸர் பிரிட்ஜ் ரோடு, ரத்தன் பஜார், ஈவினிங் பஜார், பிராட்வே பஸ் ஸ்டாண்ட், மின்ட் தெரு, என்எஸ்சி போஸ் ரோடு என பல பகுதிகளில் நீதிபதி ஏ.ராமமூர்த்தி கமிட்டி பரிந்துரைகளின்படி மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவால் ஆத்திர மடைந்த நீதிபதிகள், ‘‘ நடைபாதை வியாபாரிகளின் மறுவாழ்வுக்காக நீதிபதி ஏ.ராமமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவும் தனது பரிந்துரைகளை வழங்கி யுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரை கள் இல்லாமல் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் நடைபாதை வியா பாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப் பட்டுள்ளது? அக்குழுவின் பரிந் துரைகள் எங்கே? ஒரு அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் இப்படித் தான் அலட்சியமாக பதில் மனு தாக்கல் செய்வார்களா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த பதில் மனு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே மாநகராட்சி ஆணையரை நேரில் வந்து ஆஜராகச் சொல்லுங்கள்’’ என மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பிறகு நீதிபதிகள், நடை பாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆகியோர் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in