பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 துணைத்தேர்வு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆகஸ்ட் 24 (இன்று) முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று அங்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்களின் பட்டியலை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும்.

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப் பிக்கத் தவறியவர்கள் செப்டம்பர் 14, 15-ம் தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in