Published : 20 Jun 2016 08:49 AM
Last Updated : 20 Jun 2016 08:49 AM

மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை

திருச்சியில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைமுன் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பின்படி, முதல்கட்ட மாக 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன் படி, சென்னை மண்டலத்தில் 58, கோவையில் 60, மதுரையில் 201, திருச்சியில் 133, சேலம் மண்ட லத்தில் 48 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

போராட்டத்தை தடுக்க

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் கூறும்போது, “ஒன்றுக்கும் மேற் பட்ட கடைகள் மற்றும் அருகருகே கடைகள் உள்ள பகுதிகளில்தான், சில கடைகளை மூடியுள்ளனர். குறிப்பாக, மக்கள் போராட்டம் நடந்த பகுதிகளைத் தேர்வு செய்து, அங்குள்ள கடைகளை மூடியுள்ளனர்.

இது, டாஸ்மாக் கடை களுக்கு எதிராக மக்களி டையே போராட்டம் பரவுவதைத் தடுக்க, அரசு எடுத்துள்ள முயற்சியாகவே தெரிகிறது.

போராட்டம் தொடரும்

அரசின் இந்த நடவடிக்கையை, மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதுகிறோம். சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால், வருவாயைப் பற்றி கவலைப்படாமல், மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து கடைகளையும் மூடியிருக்க வேண்டும். அனைத்து மதுக் கடைகளையும் மூடக் கோரி போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்” என்றார்.

மக்கள் மது ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கமரு தீன் கூறும்போது, “நேரத்தைக் குறைப்பதாலோ, கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாலோ மது அருந்துவோர் எண்ணிக்கை குறையப்போவதில்லை. என் னென்ன வழிகளில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மக்க ளுக்கு அறிவிக்க வேண்டும்” என்றார்.

திருச்சி உறையூர் சாலை பகுதியில் உள்ள கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங் கள் நடைபெற்றன. இந்நிலையில், அதிகாரிகள் அந்தக் கடையை நேற்று காலி செய்து, கடைக்கு பூட்டுப் போட்டனர்.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சிவா தலைமையில், பெண்கள் சிலர் அந்தக் கடை முன் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x