

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மஜித் மேமன் உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசினர்.
ஆனால், இந்த விழாவில் கலந்துகொண்டால் கருணாநிதிக்கு நோய்த் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் ராகுல் காந்தி, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அவற்றின் புகைப்படத் தொகுப்பு:
திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்கும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
கருணாநிதியுடன் ராகுல் காந்தி
திமுக தலைவர் கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சுதாகர் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு. டி.ராஜா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியுடன்.