Published : 20 Jan 2016 08:32 AM
Last Updated : 20 Jan 2016 08:32 AM

25, 26 தேதிகளில் கருணாநிதி திருவாரூர் பயணம்

திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த தொகுதியான திருவாரூரில் வரும் 25, 26 தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் கருணா நிதி வரும் 24-ம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டு 25-ம் தேதி காலை திரு வாரூர் வருகிறார். அன்று மாலை தெற்கு வீதியில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 26-ம் தேதி காலை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்துவைக்கிறார். மாலையில் கூத்தாநல்லூரில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x