Published : 02 Feb 2017 10:34 AM
Last Updated : 02 Feb 2017 10:34 AM

பொதுக்கணக்கு குழு தலைவராக கே.ஆர்.ராமசாமி நியமனம்: எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித் தார். அதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையில் உரிமைக்குழு, பொதுக்கணக்குக்குழு, மதிப்பீட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களுக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப் பினர்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் பெயர்களை பேரவைத்தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

அப்போது, முதலில் மதிப்பீட்டுக் குழுவுக்கு 16 உறுப்பினர்களை அறிவித்து அதன் தலைவராக அதிமுகவின் நரசிம்மனை அறிவித் தார். தொடர்ந்து பொதுக்கணக்கு குழுவுக்கான 16 உறுப்பினர்கள் பெயரை அறிவித்து, அதற்கு தலை வராக காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் கே.ஆர்.ராம சாமியை அறிவித்தார். இதற்கு துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பேரவைத் தலைவர் தனபால், ‘‘இது என் அதிகாரத்துக்குட்பட்டது. என் அறையில் வந்து பேசுங்கள்” என்றார்.

ஆனால், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், பேரவைத் தலைவரை முற்றுகை யிட்டு முறையிட்டனர். ஆனால், பேரவைத் தலைவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் பெயர்களையும் வாசித்தார். திமுக உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்காததால், அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘முந்தைய ஆட்சிகளில் நடந்த நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த குழுவானது திமுக, அதிமுக வரவு செலவுகள் குறித்தும் ஆய்வு செய்யும்” என்றார்.

தொடர்ந்து, மற்ற குழுக்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் ஆட்சிக் குழு, மேலாண்மை குழுவில் இடம் பெறும் பேரவை உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்தார்.

பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்த துரைமுருகன் நிருபர்களிடம் கூறும்போது, “கடந்த திமுக ஆட்சியின்போது அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர் களிடம் குழு தலைவர் பெயர் நியமனம் குறித்து கேட்ட போது, அவர்கள் கட்சி பொதுச் செயலாளரிடம் கேட்டு சொல்வ தாக கூறினர். அவர்கள் எதுவும் சொல்லாததால், நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை தலைவராக நியமித்தோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x