மன்னார்குடியில் நடைபெறவிருந்த டிடிவி தினகரன் ஆதரவு கூட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீர் ரத்து

மன்னார்குடியில் நடைபெறவிருந்த டிடிவி தினகரன் ஆதரவு கூட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீர் ரத்து
Updated on
1 min read

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக திரு வாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் நேற்று பொதுக்கூட் டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக போலீஸ் அனுமதியும் பெறப்பட்டு மேடை, மைக் செட் போன்றவை அமைக்கப்பட் டிருந்தன. இதில் கலந்துகொள் வதற்காக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோரும் நேற்று காலை மன்னார்குடிக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை நேற்று மதியம் காவல் துறையினர் திடீரென ரத்து செய்தனர். பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்ட பந்தலடி யில் 200-க்கும் மேற்பட்ட போலீ ஸார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மேடை பிரிக்கப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “இந்த பொதுக்கூட்டம் நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதும் தெரியவந்தது. இதனால், இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்றனர்.

இந்த கூட்டத்தை நடத்த அனுமதி தரக்கூடாது என அதிமுக(அம்மா அணி) நகரச் செயலாளர் ஏ.டி.மாதவன் போலீஸில் புகார் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

மன்னார்குடிக்கு நேற்று மாலை வந்திருந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறும்போது, “யாருக்கோ பயந்து பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் கூட்டத்தை நடத்துவோம்” என்றார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற் பதற்காக வந்திருந்த புகழேந்தி, நாஞ்சில் சம்பத், குண்டு கல்யாணம் ஆகியோர் மன்னார்குடி தேரடி பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். பொதுக்கூட்டத் துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்களை அங்கிருந்து வெளி யேறுமாறு போலீஸார் அறிவுறுத் தினர். இதையடுத்து, 3 பேரும் காரில் தஞ்சாவூர் புறப்பட்டனர். அவர்களுடன் போலீஸாரும் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in