மயிலாப்பூரில் ‘பைக் ரேஸ்’: 3 மாணவர்கள் கைது

மயிலாப்பூரில் ‘பைக் ரேஸ்’: 3 மாணவர்கள் கைது
Updated on
1 min read

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேஸ் நடத்திய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேஸ் நடத்தப்படுவதாக அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு திங்கள்கிழமை மதியம் தகவல் கிடைத்தது. ஆய்வாளர் ரவிக்குமரன் தலை மையில் போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். சாலை முழுவதும் தடுப்புகளை ஏற்படுத்தி, ரேஸ் நடத்திய மூன்று பேரை பைக்குகளுடன் பிடித்தனர்.

அவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள். ஒருவர் பிளஸ் 1 மாணவர் என்று தெரியவந்தது. எழும்பூர், சூளை, தேனாம் பேட்டையைச் சேர்ந்த மூன்று பேரும் மாணவர்கள் என்பதால் அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதி காரி ஒருவர் கூறியதாவது:

பிடிபட்ட மாணவர்கள் மூன்று பேரும் சிட்டி சென்டரில் இருந்து நுங்கம்பாக்கம் கே.எப்.சி சிக்கன் கடை வரை செல்ல பந்தயம் கட்டியுள்ளனர். பந்தயத் தொகையாக ரூ.1,500 வைத்து உள்ளனர். வாகனப் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் மூன்று பேரும் 110 கி.மீ. வேகத்தில் சாலையில் சென்றுள்ளனர்.

இவர்களின் பைக் சத்தத்தைக் கேட்டு, சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். பலர் பயந்து போய், வண்டியை சாலை ஓரம் நிறுத்தி விட்டனர். பிள்ளைகள் கேட்கிறார்களே என்பதற்காக படிக்கும் வயதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக்குகளை வாங்கிக் கொடுப்பது தவறு. மாணவர்களின் தவறுக்கு பெற்றோரும் ஒரு காரணம்.

பைக் ரேஸ் நடத்துபவர்க ளால் சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிர் பறிபோகி றது. சென்னை நகர சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால், அது யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in