

அரசின் சாதனை விளக்கக் கூட்டங்கள், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வரும் 10-ம் தேதி முதல், மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங் கள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களை தொழிலாளர்கள், பொதுமக்களி டையே விளக்குதல், இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள், உறுப்பினர்கள் ஆற்றவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பணிகள் ஆகியவை தொடர்பாக அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், வரும்10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மாவட்டவாரியாக ஆலோச னைக் கூட்டங்கள் நடக்க உள்ளன.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்ன சாமி தலைமையிலும், மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் இக்கூட்டங்கள் நடக்கும். இதில் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர் கள் பங்கேற்க வேண்டும். சம்பந்தப் பட்ட மாவட்டச் செயலாளர்கள் இக்கூட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.