பிரதமர் மோடி கோவை வருகை சிறப்பு பாதுகாப்புப் படையினர் ஆய்வு

பிரதமர் மோடி கோவை வருகை சிறப்பு பாதுகாப்புப் படையினர் ஆய்வு
Updated on
1 min read

கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி சிறப்பு பாதுகாப்புப் படையினர் கோவையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் திருமுகத்தை வரும் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இதையொட்டி நிகழ்ச்சி நடை பெறும் ஈஷா யோகா மையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கோவை மாநகர போலீ ஸார் மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மேற்கு மண்டல காவல் துறை ஐஜி பாரி உட்பட 4 ஐஜிக் கள், 4 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் விழா நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.

இதையொட்டி, மாவட்ட ஆட்சி யர் த.ந.ஹரிஹரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. இதில், காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ரம்யா பாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை விமான நிலையத் துக்கு வரும் 24-ம் தேதி மாலை தனி விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் னர் மீண்டும் ஹெலிகாப்டரில் விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குச் செல்கிறார். இதை யொட்டி, விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் 9 பேர், விமான நிலையம், சூலூர் விமானப் படைத் தளம் மற்றும் விழா நடைபெறும் ஈஷா யோகா மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர் பாக ஆலோசனையும் நடத்தினர்.

ஈஷா யோகா மையத்தில் நடை பெறும் ஆதியோகி சிவன் திரு முகச் சிலை திறப்பு விழாவில், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள் ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

அத்வானி வருகை

மேலும், வரும் 25-ம் தேதி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஈஷா யோகா மையத்துக்கு வரு கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in