நம் முன்னோர்கள் பேணி வளர்த்த இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பது அவசியம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

நம் முன்னோர்கள் பேணி வளர்த்த இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பது அவசியம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்
Updated on
1 min read

நம் முன்னோர்கள் பன்னெடுங்கால மாக பேணி வளர்த்த இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட கர்னாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா டிரஸ்ட் மற்றும் சேவா சமிதி சார்பில் தியாகராஜ சுவாமிகளின் 250-வது ஜெயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் இசை விழா தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திரர் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசிய தாவது:

நம் முன்னோர்கள் இசை, நடனம், ஓவியம் போன்ற பல் வேறு துறைகளில் சிறந்து விளங் கினர். இடையில் நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காக சில தடைகளை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்றுவிட்டாலும் இங் குள்ள சிலரது எண்ணங்கள் ஆங் கிலேயருக்கு அடிமையாகவே இருக்கின்றன.

நம் கலாச்சாரம் பன்னெடுங் கால வரலாறு கொண்டது. நம் முன்னோர்கள் பேணி வளர்த்த கலாச்சாரத்தைப் பாதுகாப்பது அவசியம். தேசத் தலைவர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததி யினருக்கு கொண்டுசெல்ல வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் பிறந்த தியாகராஜ சுவாமிகள், வீரபாண்டிய கட்டபொம்மன், பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி, பாரதியார், ராஜாஜி, காம ராஜர் போன்ற தலைவர்களின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இசை மாமேதைகள் தியாகராஜ சுவாமி கள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்தி களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீஜெயேந்திரர் ஆசி வழங்கிப் பேசும்போது, ‘‘நம் கலாச்சாரத்தில் இசை முக்கிய அங்கம் வகிக் கிறது. பாரம்பரியமாக தொடர்ந்து பாடப்படுகிறது. அதை நாம் அனை வருக்கும் சொல்லிக்கொடுத்து எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும்’’ என்றார்.

ஸ்ரீவிஜயேந்திரர் தனது ஆசி யுரையில், ‘‘மனதுக்கு அமைதி, தெளிவைக் கொடுக்கக்கூடியது இசை. இதனால் மனம் ஒருமுகப் படும். சங்கீதம் மற்றும் பக்தி மார்க்கத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in