

புஹாரி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தினர்.
புஹாரி குழுமமும், துபையை தலைமையிடமாக கொண்ட இ.டி.ஏ குழுமமும் இணைந்து இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றன. பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் மகன்கள் ஆரிப், அப்துல் காதர், அகமத், அஸ்ரப் மற்றும் 2 மகள்கள், மருமகன்கள் இந்த தொழில்களை நிர்வகித்து வருகின்றனர்.
புஹாரி குழும நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை அலுவலகத் துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்நிறுவனத் துக்கு சொந்தமான இடங்களில் நேற்று 3-வது நாளாக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் புஹாரி குழுமத்துக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடத் தப்பட்டது. பிற மாநிலங்களில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தியா முழு வதும் 76 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. மொத் தம் ரூ.500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறப் படுகிறது. இது தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங் களையும் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறும் புகாரி நிறுவனத் திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளது. உரிய விளக்கம் அளிக்காதபட் சத்தில் நேரில் ஆஜராகும்படி கடிதம் அனுப்ப வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர், நினைவூட்டல் கடிதம், அதைத் தொடர்ந்தும் நேரில் விளக்கம் அளிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை பாயும் என வருமான வரி புல னாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஐடி ரெய்டு இன்னும் தொடரும். புஹாரி குழுமத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக சரியான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்பது முதல்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. இந்த நேரத்தில் பறிமுதல் செய்யப்பட் டுள்ள ஆவணங்கள், அதன் மதிப்பு குறித்து கருத்து தெரி வித்தால் விசா ரணையில் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சோதனை நிறைவடைந்து முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப் பட்ட பின்னர் அதுபற்றிய முழு விப ரமும் தெரிவிக்கப்படும்” என்றனர்.