

உதகையில் இன்று தொடங்கும் ரோஜா கண்காட்சியில் ரோஜா மலர்களால் பரதநாட்டிய கலை ஞர்கள் அலங்காரம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத் தில் கோடை விழா தொடங்கி நடந்து வருகிறது. உதகை ரோஜா பூங்காவில் 15-வது ரோஜா கண் காட்சி இன்றும் (மே 13), நாளையும் (மே 14) நடைபெற உள்ளது.
தோட்டக்கலைத் துறை சார்பில் பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு நுழைவுவாயில் அலங்கார வளைவு, பரத நாட்டிய கலைஞர்கள் உருவம் வடிவமைக் கப்பட உள்ளது. இதற்கான பணி, துரிதமாக நடந்து வருகிறது.
கண்காட்சி நடைபெறும் இரு தினங்களிலும், பூங்கா வளாகத்தில் இன்னிசை, மேஜிக் ஷோ மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7.30 வரை பொதுமக்கள் அனுமதிக் கப்படுவர். பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர் களுக்கு ரூ.15 நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரோஜா கண்காட்சியை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று காலை தொடங்கி வைக்கிறார். தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் ரா.ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.