டாஸ்மாக் கடையில் தீ விபத்து: ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் நாசம்

டாஸ்மாக் கடையில் தீ விபத்து: ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் நாசம்
Updated on
1 min read

திருக்கழுக்குன்றம் அடுத்த நாவலூர் பகுதியில் டாஸ்மாக் கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் தீயில் எரிந்து நாசமாயின.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நாவலூர் கிராமப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த மது பாட்டில்களில் தீப் பிடித்து எரியத் தொடங்கின. தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவால் இந்த தீ விபத்துக்கு நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து, கடையின் மேற்பார்வையாளர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், திருக்கழுக்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in