

கோவையில் `நமோ பேரவை' என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, சமூக வலைதளங் களில் மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர் சில இளைஞர்கள். இதன் அடுத்தகட்ட முயற்சியாக எனது பிரதமர் மோடி, (www.mypmmodi.com) என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். இதுகு றித்து நமோ ஒருங்கிணைப்பாளர் பிரவீன் சீனிவாசன் கூறியதாவது, ‘ஊழல் இல்லாத வேட்பாளராகவும், வளர்ச்சிமிக்க குஜராத்தை உருவாக்கியவருமான மோடியை முன்வைத்து இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் டீக்கடை முறையை பின்பற்றுகிறோம் என்றார்.
இவர்களது இணையதளத்தில் ‘இணைய ராணுவம்’ (e-army) என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்த்துவருகின்றனர்.