திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் அணி ஆட்சி மாற்றத்துக்கான அணியாக திகழும்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் அணி ஆட்சி மாற்றத்துக்கான அணியாக திகழும்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
Updated on
1 min read

முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்ற திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சி களைக் கொண்ட அணி, ஆட்சி மாற்றத்துக்கான அணியாக இருக் கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும், தமிழக மக்களின் அடிப் படைத் தேவைகளை நிறைவேற் றவும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் முழுமை யான வெற்றி பெற்றுள்ளது. இதற்காக திமுக சார்பில் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் வணிகர்கள், தொழிலாளர்கள், திரையுலகினர், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறவழியில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

ஒருசில கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. ஆனாலும், போராட்டத்தின் நியாயத்தை அவர்களும் உணர்ந்துள்ளனர். திமுக மீது தனிப்பட்ட முறையில் சில கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. அரசியல் எல்லைகளைக் கடந்தும் இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும்வரை முனைப்பான போராட்டங்கள் தொடரும். தமிழக மக்களின் நலனுக்காக தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடன் தொடர்ந்து களம் காண்போம். இது தேர்தல் வெற்றிக்கான அணி அல்ல. அதே நேரத்தில் ஆட்சியாளர்கள் மக்கள் நலனை புறக்கணித்து தேர்தலை திணிக்கும் சூழலை உருவாக்கினால் ஆட்சி மாற்றத்துக்கான அணியாக இது இருக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள் ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in