தேர்தல் செலவு கணக்கை வேட்பாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

தேர்தல் செலவு கணக்கை வேட்பாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

செய்ய வேண்டியவை

வேட்பாளர்கள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களை முறையாக, முன்னதாக நியமிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், அது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். தேர்தல் செலவு கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

வேட்பாளர் பெயர், கட்சி, சின்னம் பொறித்த வாக்குச் சாவடி சீட்டுகளை வழங்கக் கூடாது. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்கக் கூடாது. ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட குண நலன்கள் குறித்து தவறான அறிக்கை வெளியிடக் கூடாது. வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல வாகனங்களை அமர்த்தக் கூடாது. தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை மீறக் கூடாது. தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் எந்தவித பிரச்சாரமும் மேற்கொள்ளக் கூடாது. மற்ற கட்சியினர் நடத்தும் கூட்டத்தில் பிரச்சினை ஏதும் செய்யக்கூடாது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய தவறக் கூடாது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in