

ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் வருகிற 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜாவும், திமுக வேட்பாளர் மாறனும் நேரடி போட்டியில் உள்ளனர்.
இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. இதனையடுத்து தொகுதியில் இருந்து வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் பேட்டி:
ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 269 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இடைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்றார்.