Published : 14 Sep 2016 07:40 AM
Last Updated : 14 Sep 2016 07:40 AM

சர்வதேச எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார் தமிழக டாக்டர் எஸ்.ராஜசேகரன்

சர்வதேச எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தமிழக டாக்டர் எஸ்.ராஜசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை டாக்டர்களுக்காக “சர்வதேச எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (SICOT)” செயல்பட்டு வருகிறது.பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த சங்கம் 127 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது.

உலகம் முழுவதும் 32 ஆயிரம் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை டாக்டர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். தமிழகத் தில் 72 பேர் உட்பட இந்தியா முழுவதும் 575 டாக்டர்கள் உறுப் பினராக செயல்பட்டு வருகின்றனர். சங்கத்தின் ஆண்டு கூட்டம் இத்தாலி தலைநகர் ரோம் நகரில் கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத்தின் இறுதி நாளான 10-ம் தேதி சங்கத்தின் சர்வதேச தலைவராக கோயம்புத்தூர் கங்கா மருத்துவ மனையின் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை துறை தலைவராக பணி யாற்றி வரும் டாக்டர் எஸ்.ராஜ சேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பில் 2 ஆண்டுகள்:

சர்வதேச எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத் தியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு சென்னை திரும்பிய டாக்டர் எஸ்.ராஜசேகரன் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

உலகின் பழமையான மற்றும் பெரிய அமைப்பான சர்வதேச எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சங்கத்தின் 32 ஆயிரம் உறுப்பினர்கள் வாக் களித்து என்னை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும் 2-வது இந்தியர் நான். தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். உரிய பயிற்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு கடந்த 10-ம் தேதி சங்கத்தின் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டேன். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு தலைவர் பொறுப்பில் இருப்பேன்.

நவீன சிகிச்சை முறைகள்:

இந்த சங்கத்தில் தகுதியும் திறமையும் வாய்ந்த எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை டாக்டர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாநாட்டில் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சையின் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்படும், திறமையான டாக்டர்களை ஊக்குவித்து கவுரப் படுத்தப்படும். பெல்லோஷிப் திட்டத்தின் மூலம் டாக்டர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். சங்கத்தின் இதழில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்படும்.

இலவச அறுவைச் சிகிச்சை:

நான் தலைவராக இருக்க உள்ள 2 ஆண்டுகளில் 2 பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு டாக்டரும் ஆண்டுக்கு ஒரு அறுவைச் சிகிச்சையை இலவசமாக செய்ய வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு 32 ஆயிரம் நோயாளிகள் இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு பயன்பெற முடியும்.

உலக அளவில் சாலை விபத்துகள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக் கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் சாலை விபத்தை கட்டுப்படுத்த காவல் துறையுடன் இணைந்து செயல்படுவது மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் எஸ்.ராஜசேகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x