

எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் தொடரும் குழப்பத்தால், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234-க்கு 133 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி யது. அதன்பின் 3 தொகுதி களுக்கு நடந்த தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்றது. இதனால் பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது. 136-ல் பேரவைத் தலைவர் பி.தனபால் தவிர, 135 எம்எல்ஏக்கள் அதிமுகவில் செயல் பட்டனர். இதில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 134 ஆக குறைந்தது. இவர் களில் 133 பேரின் ஆதரவுடன் தான், டிசம்பர் 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல் வரானார். அதன்பின், பிப்ரவரி 5-ம் தேதி ஓபிஎஸ் ராஜினாமா செய்த நிலையில், ஓபிஎஸ் உடன் சேர்த்து, 134 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக முயற் சித்தார் சசிகலா.
பிப்ரவரி 7-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தலைமையை எதிர்க்க குழப்பம் ஆரம்பமானது. பிப்ரவரி 9-ம் தேதி ஆளுநர் தமிழகம் வந்தார். அவரை, ஓபிஎஸ், சசிகலா தரப் பினர் தனித்தனியாக சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ் தனக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டார். சசிகலா, 134 எம்எல்ஏக் கள் பலம் இருப்பதாகக் கூறி ஆட்சி யமைக்க உரிமை கோரினார்.
9 எம்எல்ஏக்கள் ஆதரவு
அதன் பின், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தற்போது வரை 9 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். இதற்கிடையில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பால் சசிகலாவுக்கு முதல்வராகும் வாய்ப்பு பறி போனது. எனவே, எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை அதிமுக கட்சி தலைவராக தேர்வானார். அவர் 14-ம் தேதி ஆளு நரிடம் 124 எம்எல்ஏக்கள் ஆதர வுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், உயர் நீதிமன்ற ஆட்கொணர்வு மனு மீது, காஞ்சிபுரம் காவல்துறையினர் கூவத்தூர் விடுதியில் விசாரணை நடத்தியபோது, 119 எம்எல்ஏக் களிடம் விசாரணை நடத்தியதாக அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பின், நேற்று வரை சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் தங்களுக்கு 125 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப் பதாகக் கூறி வருகின்றனர். இதற் கிடையில், ஆளுநரை நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போ தும், தங்களுக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதே நேரம், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜ், நான் எந்த அணியிலும் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்க வில்லை. ஒன்றாக ஒரே தலைமை வந்தால் ஆதரவளிப்பேன் என கூறி னார். அதேபோல், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் இதுவரை எந்த தரப்புக்கு ஆதரவு என கூறவில்லை. இதனால், எடப்பாடிக்கு ஆதரவாக இருப் பவர்கள் எத்தனை எம்எல்ஏக்கள் என்பதிலும் குழப்பம் உள்ளது. கூவத்தூரில் இருப்பவர்கள் எண் ணிக்கையிலும் தெளிவில்லை.
எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டடுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து ஆளுநரிடம் தெரிவித்து வருகிறது. அதே நேரம், நாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை. எங்கள் விருப்பப்படி தங்கியுள்ளோம் என எம்எல்ஏக்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் மீண்டும் மீண்டும் வந்து ஊடகங்களில் முகம் காட்டுகின்றனர்.
நேற்று காலை முதல் இரவு வரை எந்த ஒரு எம்எல்ஏவும் ஓபிஎஸ் முகாமுக்கு வரவில்லை. இந்த குழப்பமான குட்டையில் ஓபிஎஸ் இன்னும் எத்தனை மீனை பிடிக்கப் போகிறார் என்பதும் தெரிய வில்லை. இருப்பினும் பெரும் பான்மையை நிரூபிப்போம் என் கிறது ஓபிஎஸ் தரப்பு. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, நிர் வாகிகளுடன் தொடர் ஆலோசனை யிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், எம்எல்ஏக் கள் ஆதரவு கடிதங்களில் அளிக்கப் பட்டுள்ள கையெழுத்துகள், சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து பெறப்பட்ட எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் ஒப்பிட்டு பார்க் கப்படுவதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது. கையெழுத்தில் ஏதே னும் சர்ச்சை எழுந்தால், எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு ஆதரவு கிடைக்குமா என்பதும் கேள் விக்குறியாகி உள்ளது.