

உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக பதவி வகித்த அரவிந்த் பாண்டியன், கோமதி நாயகம், சுகுமாரன் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த செல்லபாண்டியன் ஆகியோர் தங்கள் பதவியை நேற்றிரவு திடீரென ராஜினாமா செய்தனர்.
இதேபோல சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை குற்ற வியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆகியோரும் ராஜி னாமா செய்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. புதிய அரசு பிளீடராக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.