

சுவாதியின் கொலையைக் கண் டித்து தமிழக பாஜக சார்பில் சென் னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூலிப்படை களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அவர்களை ஒடுக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் ஐடி ஊழியர் சுவாதி கொடூ ரமான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. கொலை செய்தவரை கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதை கண் டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கட்சி சார்பின்றி அனைத்து அமைப்பு களும்பங்கேற்க வேண்டும்.