உத்திரமேரூர் அருகே அரியவகை மரங்களை வளர்த்து மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் ‘மரம்’ மாசிலாமணி

உத்திரமேரூர் அருகே அரியவகை மரங்களை வளர்த்து மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் ‘மரம்’ மாசிலாமணி
Updated on
2 min read

காஞ்சிபுரம் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில், தனியார் ஒருவர் பண்ணையில் பராமரிக்கும் அரிய வகை மரங்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, அங்கு பன்னீர் புஷ்பம் என்ற மரக்கன்று ஒன்றை நட்டார்.

கஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் மரம் மாசிலாமணி என்பவர் பல்வேறு அரியவகை மரங்கள் என 600-க்கும் மேற்பட்ட மரங்களை எழில் சோலை என்ற பெயரில் வளர்த்து வருகிறார். மேலும், பள்ளி குழந்தைகளின் தாவரவியல் ஆய்வுக்கும் மரங் களை பார்வையிட இலவசமாக அனுமதித்து வருகிறார். மேலும், பள்ளி மற்றும் கோயில் வளா கங்களில் மரக்கன்றுகள் நடு வதற்காக, நர்சரி அமைத்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்தும் வழங்கப்படுகிறது.

இந்த பண்ணையில், ருத்திராட் சம், திருவோடு, ஒருகொத்தில் 13 இலைகளை கொண்ட மகாவில்வம், கேரளா மாநிலத்தில் வளர்க்கப்படும் கொடம்புளி, எவர்கீரின், ஈட்டி, வேங்கை, தான்றிக்காய், புன்னைமரம், நாகலிங்கம், கடம்ப மரம் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த செந்திலை போன்ற பல்வேறு அரியவகையான 600 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பண்ணையை பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் கஜ லட்சுமி நேற்று அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரியவகை மரங்கள் பராமரிப்பதற்காக பாராட்டு தெரிவித்தார். பின்னர், பண்ணையில் பன்னீர் புஷ்பம் என்ற மரக்கன்றை நட்டார்.

இதுகுறித்து, மரம் மாசிலாமணி கூறியதாவது: நகரப்பகுதியில் வளர்ச்சி காரணமாக மரங்களை வளர்ப்பது குறைந்து வருகிறது. இதனால், நகரப்பகுதியில் காற்றில் கடுமையான மாசு ஏற்பட்டு வருகிறது. மேலும், வெயில் காலங்களில் நிழலுக்கு ஒதுங்கவும் மரங்கள் இல்லை. இதனால், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் எனக்கு சொந்த மான 10 ஏக்கர் நிலத்தில் 600 வகையான மரங்களை வளர்த்து வருகிறேன். மக்கள் மனதில் மரங்களை வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன்.

மேலும், பண்ணையில் காடு போன்ற சூழலில் வளரும் மரங்களில் நகரப்பகுதியில் காணமுடி யாத பல்வேறு அரியவகை பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. விலை மதிப்பான சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற மரங்களையும் வளர்த்து வருகிறேன். 2 ஆயிரம் வகையான மரங்களை வளர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகளை செய்து வருகிறேன். மரங்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் தாவரவியல் தொடர்பான ஆய்வு கள் மேற்கொள்ள விரும்பும் பள்ளி நிர்வாகங்கள் எப்போது வேண்டுமானாலும், பண்ணையில் உள்ள மரங்களை பார்வையிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in