Published : 27 Mar 2014 11:03 AM
Last Updated : 27 Mar 2014 11:03 AM

இங்கிலாந்துக்கு விசா வழங்க சென்னையில் புது மையம்: பிரிட்டிஷ் துணைத் தூதர் திறந்து வைத்தார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டிற்கான விசா விண்ணப்ப மையத்தை இந்தி யாவிற்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் பாரத் ஜோஷி புதன்கிழமை திறந்து வைத்தார்.

இங்கிலாந்து நாட்டின் விசாவுக்கு விண்ணப்பிப்பதற் கான புது மையம் சென்னையில் புதன்கிழமை திறந்து வைக்கப்பட் டது. சென்னை நுங்கம்பாக்கம் எத்திராஜ் சாலையில் அமைக்கப் பட்டுள்ள இந்த மையத்தை இந்தியாவிற்கான இங்கிலாந்து துணைத் தூதர் பாரத் ஜோஷி திறந்து வைத்தார். அப்போது அங்கு விசாவுக்கு விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்களிடம் இங்கிலாந்து நாட்டிற்கு செல்வது குறித்தும், புதிதாக திறக் கப்பட்டுள்ள மையம் குறித்தும் கலந்துரையாடல் செய்தார்.

துணைத் தூதர் பேட்டி

பின்னர் பாரத் ஜோஷி ‘தி இந்து’ விடம் கூறியதாவது: இங்கிலாந்து விசா விண்ணப்ப மையம் சென்னையில் ஏற்கெனவே கீழ்ப்பாக்கத்திலுள்ள சிம்பனி பேலஸில் இயங்கி வந்தது. அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், விண்ணப் பதாரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

அதுமட்டுமன்றி அந்த மையத்தில் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. ஆகவே எத்திராஜ் சாலையில் புது விசா மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஆட்கள் வந்து போவதற்கென்று நிறைய இட வசதியுள்ளது. மேலும் 5-க்கும் அதிகமான கவுன்டர்கள் மற்றும் பயோமெட்ரிக் தொழில் நுட்பம் போன்றவை இங்கு இருப்பதால் விசாவுக்கு விண்ணப் பிப்பதற்கான அனைத்து நடை முறைகளையும் 45 நிமிடங்க ளுக்குள் முடித்து விடலாம்.

புது வசதிகளுடன்..

அதோடு பாஸ்ட் ட்ராக், சூப்பர் பிரியாரிட்டி என்னும் புது வசதிகளுடன் பாஸ்போர்ட் பாஸ் பேக் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இங்கிலாந்து செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பம் செய்த பின்னர் அவருடைய பாஸ்போர்ட் விசா மையத்திலேயே இருந்தால் அவர் வேறொரு நாட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது.

எனவே 24 மணி நேரத்தில் அவரது பாஸ்போர்ட்டை திருப்பித் தரும் விதமாக பாஸ்போர்ட் பாஸ் பேக் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் காத்திருப்பிற்காக பிரத்யேக அறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் வேலை நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x