கடலில் மிதக்கும் எண்ணெயால் இறக்கும் ஆமைகள்: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

கடலில் மிதக்கும் எண்ணெயால் இறக்கும் ஆமைகள்: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
Updated on
2 min read

சென்னை கடலோரப் பகுதியில் மிதக்கும் எண்ணெயால் பல ஆமைகள் இறந்துள்ளன. இதனால் சென்னை கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் கடுமை யாக பாதிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

மீன் வளத்தை பெருக்கும் சக்தியாக கடல் ஆமைகள் விளங்குகின்றன. இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ள இனமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச் சகம் அறிவித்துள்ளது. இந்த இனத்தை காப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த கடல் ஆமைகள், டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கட லோரப் பகுதிக்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக் கத்தில் ஈடுபட்டு வரு கின்றன. இந்த இனப்பெருக்க காலத்தில் கடல் ஆமை கள் அதிக அளவில் கடலோ ரங்களை நோக்கி வரும் என்ப தால், தமிழக அரசு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 7 கடல் மைல் தொலைவுக்கு இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது.

கடல் ஆமைகளுக்கு இவ் வளவு முக்கியத்துவம் வழங்கப் பட்டு வரும் நிலையில், அதன் இனப்பெருக்க காலத்தில், இந்த கப்பல் விபத்து ஏற்பட்டதால், அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெயால், சென்னை கடலோரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கடல் ஆமைகள் இறந்து மிதக்கின்றன.

இது தொடர்பாக சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறும்போது, “இந்த விவகாரத்தில், குறைந்த கசிவு என்று காமராஜ் துறைமுக நிர்வாகம் பொய்யான தகவலை வெளியிட்டது. குறைந்த கசிவு என்றால், திருவான்மியூர் வரை எண்ணெய் படலம் படிய வேண்டியதில்லை. பல மீன வர்கள் கடலுக்கு செல்லாமல் வருவாய் இழந்துள்ளனர். ஆமைகளும், மீன்களும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இந்த எண்ணெய் படலத்தில் பல்வேறு வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவை உயிரி னங்களை அழிக்கும் திறன் உடையவை. சுமார் 20 ஆண்டு களுக்கு மேல், கடல் வாழ் உயி ரின உணவுச் சங்கிலி அழிப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் கடல் ஆமை பாது காப்புக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் அருண் கூறும் போது, “ஐனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் கடற்கரையில் முட்டையிட வரும் கடல் ஆமைகள், கடற் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு உட்பட்ட பகுதியில்தான் அதிகம் கூடு கின்றன. இந்நிலையில், கடலில் படிந்துள்ள எண்ணெய் படலம் முட்டையிட வரும் ஆமைக ளுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

கடலில் எண்ணெய் படலம் பரவியுள்ள இடங்களில் ஆமை கள் இடம்பெயர்வதற்கு சிரமப் படும். அதோடு, சுவாசிப்பதற்கு கடலின் மேல்மட்டத்துக்கு ஆமைகள் வரும்போது அவை மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்படும். சுவாசிக்கும்போது எண்ணெய் படலம் உட்சென்று விட்டால் அவை இறப்பது நிச்சயம். எனவே, அரசு துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்” என்றார்.

செய்தித் தொகுப்பு: ச.கார்த்திகேயன், ப.முரளிதரன், க.சக்திவேல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in