

ஜெகத்ரட்சகன் வீட்டில் நடத்தப் பட்டு வரும் சோதனைகளுக்கு அரசியல் காரணங்கள் ஏதும் உள்ளதோ என்று திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் அவரை சிறைக்கைதி போல வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு வீட்டில் விசாரணை நடத்துவது தவறல்ல. 40 இடங்களில் சோதனை நடத்துவதாகத் கூறி, ஜெகத்ரட்சகனின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல், வீட்டில் அடைத்துவைப்பது சட்டத்துக்கு புறம்பானது. வருமான வரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவையான அளவு அதிகாரிகளை அளிக்காமல், இரவு பகல் பாராமல் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனையிடுவது கண்டிக்கத்தக்கது.