

வெள்ளிக்கிழமையன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக நாளை (வெள்ளி) கர்நாடகத்தைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து பள்ளிகள் இயங்குமா என்பது பற்றி பெற்றோர்களுக்கு ஐயம் எழுந்துள்ள நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு லட்சம் போலீஸார் ஏற்கெனவே காவல்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15,000 போலீஸார் காவல்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ரயில் நிலையங்கள், பேருந்துகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று காவல்துறை அறிவித்துள்ளது