

தலைமறைவாக இருக்கும் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக உயர் நீதி மன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது.
வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன் கடந்த மே மாதம் தலை மறைவானார். இவரை கண்டு பிடித்து ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய் தார். இதே போல் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவ தாகக் கூறி மதன் ரூ. 72 கோடி வரை மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாதிக் கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பிலும் தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ் ணனை சிறப்பு அதிகாரியாக நிய மித்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘மாயமாகியுள்ள மதன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும்’ என காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதனை கைது செய் வதற்கு நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் (செப்.21) முடி கிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மதனை கைது செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.