வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்க வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்க வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
2 min read

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருந்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி பாமக வேட்பாளர் பாஸ்கரன், தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் எஸ்.எஸ்.ராமலிங்கம் ஆகியோர் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் கூறியிருப்பதாவது:

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப் படையில் தஞ்சாவூர், அரவக் குறிச்சியில் மே 16-ம் தேதி நடை பெற வேண்டிய தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக தேர்தல் ஆணையம் இருதொகுதி வாக்காளர்களிடம் முறையாக விசாரணை நடத்தி அந்த தொகுதிகளின் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக் காவது தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் வெல்லும். அதுவரை 2 தொகுதி களிலும் தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் 3 பேர் இதே கோரிக் கையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த தேர்தல் வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்த மன், ‘‘எங்கள் கோரி்க்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இந்த 2 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைத்துள்ளது. ஆனால் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்த அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை இன்னும் தகுதி நீக்கம் செய்ய வில்லை’’ என்றார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘‘சட்டத்தால் தண் டிக்கப்பட்ட ஒரு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதற்குத்தான் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள் ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரில் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘வாக் காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது மிகப்பெரிய குற்றம். இந்த குற்றத்தில் ஈடுபடும் வேட்பாளர் களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றால் எதிர்காலத்தில் இந்த பிரச்சினையை எப்படி கையாள முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு உரிய அதிகாரம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கும், சட்ட ஆணையத்துக்கும் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். அத்துடன் இந்த வழக்குகளில், தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி வழக்குகளை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in