

போலீஸ் ஐஜி பிரமோத்குமாரின் 4 ஆண்டுகால இடைநீக்க உத் தரவை ரத்து செய்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாசி பாரெக்ஸ் ஊழ லில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஐஜி பிர மோத்குமார், கடந்த 2012-ல் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட் டார். இதையடுத்து அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன் றம், கடந்த 2013-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது. 2015-ல் இந்த வழக்கை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் முடித்து வைத்தது.
அதன்பிறகும் தனது இடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படாத தால், அதை எதிர்த்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பிரமோத்குமார் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப் பினர் ஜி.ராஜசூர்யா மற்றும் நிர் வாக உறுப்பினர் ஆர்.ராமனுஜம் ஆகியோர், ‘‘மனுதாரர் பிரமோத் குமார் மீதான வழக்குகள் ஏற் கெனவே முடித்து வைக்கப்பட்டுள் ளன. ஒரு அதிகாரியை தொடர்ந்து பணி இடைநீக்கத்தில் வைத்திருப் பது தேவையற்றது. அதன்மூலம் அரசுக்கும் தேவையற்ற செலவு தான் ஏற்படுகிறது. எனவே, அவரது பணி இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத பதவியை உடனே வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.