Published : 24 May 2017 09:33 AM
Last Updated : 24 May 2017 09:33 AM

6 - 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்வி அறிமுகம்

பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்பவியல் கல்வியை புதிய பாடத்திட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்புவரை அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக கற்பிக்க வசதியாக பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப்படும். புதிய பாடத்திட்டத்தில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

* மனப்பாடம் சார்ந்ததாக இரா மல் படைப்பாற்றல் சார்ந்த கல்வி.

* தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உருவாக்கும் தேர்வாக இல்லாமல் கற்றலின் இனிமையை உறுதிசெய்வது.

* தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுகளை மாணவர்கள் பெறுவதுடன் அவர்கள் தன்னம்பிக் கையுடன் அறிவியல் தொழில்நுட் பத்தை கையாளச் செய்வது.

* அறிவுத்தேடலை வெறும் பாடப்புத்தக அறிவாக குறைத்து மதிப்பிடாமல் பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்கச்செய்து வழிகாட்டுதல்.

இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலை (இ-லேனிங்) ஊக்கு விக்கும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மை தளத்தை உருவாக்கி ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதில் பயன்படுத் தக்கூடிய மொபைல் செயலிகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x