Published : 24 Jul 2016 09:35 AM
Last Updated : 24 Jul 2016 09:35 AM

வைரவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு எல்ஐசி வாடிக்கையாளர்களை வீடு தேடி சந்திக்கும் முகாம்: தென்மண்டல மேலாளர் தொடங்கிவைத்தார்

எல்ஐசி வைர விழா ஆண்டை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை எல்ஐசி அதிகாரிகள், முகவர்கள் வீடு தேடி வந்து விவரங்களைப் பெறும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. காலாவதியான பாலிசிகளை சலுகைகளுடன் புதுப்பிக்க சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழத்தின் (எல்ஐசி) பிராந்திய மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) என்.பிரபாகர் ராவ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

எல்ஐசி நிறுவனம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி 60 ஆண்டு களை நிறைவு செய்து வைர விழா ஆண்டு கொண்டாட உள்ளது. இதை யொட்டி பல பயனுள்ள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாடிக்கையாளர்களை எல்ஐசி அதிகாரிகள், முகவர்கள் சந்திப்பார்கள். அவர்களது அனுபவங்கள், மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான படிவங்கள், செல்போன், இமெயில் விவரங் களை சேகரிப்பார்கள். இந்த முகாம் மூலம் புதிய வாடிக்கையாளர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்த சிறப்பு முகாமை எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஆர்.தாமோ தரன் சனிக்கிழமை தொடங் கிவைத்தார். சென்னை கோட் டம் 1, 2-ன் மேலாளர்கள் ஜி.வெங்க டரமணன், பி.டி.ரவீந்திரன் தலை மையில் 100 கோட்ட மற்றும் கிளை வணிக அதிகாரிகள், 19 ஆயிரம் முகவர்கள், 600-க்கும் மேற்பட்ட வளர்ச்சி அதிகாரிகள், எல்ஐசி ஊழியர்கள் உதவியுடன் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

78 சதவீதம்

காலாவதியான பாலிசிகளை சலுகைகளுடன் புதுப்பிக்க சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை காப்பீட்டுதாரர்கள் பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். 2015-16 வணிக ஆண்டில் எல்ஐசியின் பாலிசி, எண்ணிக்கை அடிப்படையில் 78 சதவீத வணிகச் சந்தை பங்களிப்பை எட்டியுள்ளது. புது பிரீமிய வருமான அடிப்படையில் 73 சதவீத சந்தைப் பங்களிப்பை அடைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x