

இந்தியாவில் எம்பி., எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிடு பவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும். அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே, தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத் துக்கு சுப்பிரமணிய பாரதியார் சிந்தனையாளர் மன்றச் செய லாலர் ஆர்.லட்சுமி நாராயணன் கடந்த ஜூன் மாதம் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், தற்போது நாடாளுமன்றம், சட்டப்பேரவை நடைமுறை தெரியாதவர்கள் எம்பி, எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்த லில் போட்டியிடும் முன்பு ஒவ்வொருவரும் குடியரசுத் தலைவர், ஆளுநர், சட்டப் பேரவைத் தலைவர், மாநிலங் களவை துணைத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து வைத் திருப்பது அவசியம். இதற்காக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தனி தேர்வு நடத்த வேண்டும். இந்தத் தேர்வில் 35 மதிப்பெண் பெறுபவர்களை எம்எல்ஏ தேர்தலிலும், 40 சதவீத மதிப்பெண் பெறுபவர்களை எம்பி தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது கடிதத்தின் நிலை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தகவல் கேட்டு லட்சுமிநாராயணன் மனு அனுப்பினார். அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தகவல் அலுவலர் என்.டி.புட்டியா பதில் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் ‘‘வேட் பாளர்களுக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் ஆணை யத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும்’’ என குறிப் பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லட்சுமி நாராயணன் கூறியதாவது: நாடாளுமன்றம், சட்டப்பேரவை சுமுகமாக நடைபெற தகுதியான வர்கள் எம்எல்ஏ, எம்பியாக தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது அதி காரம், பணிகள் பற்றி தெரி யாமல் உள்ளனர். இதனால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை களில் அத்தியாவசியமான மக் கள் பிரச்சினைகளை பேசாமல் கூச்சல், அமளியில் ஈடுபட்டு அவையின் நேரத்தை வீணடித்து வருகின்றனர் என்றார்.