நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டதால் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை: பெண்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடல்

நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டதால் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை: பெண்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடல்
Updated on
1 min read

நெடுஞ்சாலை பகுதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட தால், பொன்னேரி அருகே குடி யிருப்புப் பகுதியில் உள்ள மதுக்கடையில் கூட்டம் அலை மோதியது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையால், பல்வேறு இன்னல் களுக்கு ஆளாவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்தக் கடையை அகற்றவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால், லட்சுமிபுரம் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. இந்தக் கடையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள லட்சுமிபுரம் பகுதி பெண்கள், 50-க்கும் மேற் பட்டோர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி போலீஸார், டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். எனினும், அதை ஏற்க மறுத்த பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நேற்று லட்சுமி புரம் டாஸ்மாக் கடை தற்காலி கமாக மூடிய டாஸ்மாக் நிர்வாகம், அந்தக் கடையை வேறு இடத் துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் மாநில நெடுஞ் சாலையான டிரங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மூடப் பட்டது. எனினும், அந்த கடையின் பின்பக்க சுவரை உடைத்து, புதிய வழியை ஏற்படுத்தி விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைடுத்து நூற்றுக் கணக்கானோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பூந்தமல்லி போலீ ஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சம்பந்தப் பட்ட மதுக் கடையை விரைவில் அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in