

கச்சா எண்ணெய் கரை ஒதுங் கிய எர்ணாவூர் பகுதியில் வசிப் போருக்கும், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட் டோருக்கும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்று தமிழக அரசுக்கு உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
எர்ணாவூர் அருகே கரை ஒதுங்கிய எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர் கள், மீனவர்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஈடு படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய, “சுகாதார மேம்பாட்டுக்கான முயற்சி” என்ற அமைப்பின் மூலம் மருத்துவர்கள் ஸ்ருதி, அமரன் ஆகியோர் கடந்த 7-ம் தேதி ஆய்வு செய்தனர். அது தொடர் பான ஆய்வறிக்கையை அவர்கள், சென்னையில் நேற்று வெளியிட்ட னர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
அபாயகரமான எண்ணெய் கழிவை அகற்றும் பணியில், பயிற்சி பெற்ற தேர்ந்த பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண் டும். ஆனால் எந்த பயிற்சியும் இல்லாத மீனவர்கள், பொது மக்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். இவர்கள் போதிய தற்காப்பு கவச உபகரணங்களை உபயோகிக்கவில்லை. இப்பணி யில் ஈடுபட்டுள்ள பணி யாளர்கள், பொதுமக்கள், குழந் தைகள் ஆகியோரிடம் நடத்திய ஆய்வில், அவர்களுக்கு தொண்டை எரிச்சல், மார்பு இறுகுதல், இருமல், வாந்தி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த எண்ணெயில் உள்ள ஆவியாகக்கூடிய வேதிப்பொரு ளான பென்சீல், ரத்த புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரணி ஆகும். டோலுயின், சிறுநீரகம், கல்லீரலை பாதிக்கும். சைலின் என்ற வேதிப்பொருள், கண் மங்குதல், நடுக்கம், பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
சம்பந்தப்பட்ட துறைகள், சுகாதார தாக்கங்களை கையாள் வது தொடர்பாக போதிய அளவு அக்கறை காட்டவில்லை. எண் ணெயின் நச்சுத்தன்மை, அதன் இயல்பு, கசிவின் அளவு போன்ற எந்த தகவல்களும் வழங்கப் படாததால், அப்பகுதியில் வசிப் போர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இன்றி இருந் துள்ளனர். பெரியவர்களை விட, குழந்தைகள் அதிக முறை சுவாசிக்கக்கூடியவர்கள். அக்குழந் தைகளை பாதுகாக்கக்கூட நட வடிக்கை எடுக்கப்படாதது அதிர்ச் சியை அளிக்கிறது. எண்ணெய் கழிவுகள் தேங்கிய பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு குமட்டல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆய்வறிக்கை
அதனால், பாதிக்கப்பட்ட பகுதியில் குடியிருப்போருக்கும், எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டோருக்கும் தற் போதும், பிற்காலத்திலும் ஏதேனும் உடல்நல பாதிப்பு அறிகுறிகள் தென்படுகிறதா என தொடர் மருத்துவக் கண்காணிப்பு செய்ய வேண்டியது அவசியம்.
மேற்கூறிய அனைத்து தகவல் களும், இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். அதை தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையிடம் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வறிக்கை வெளியீட்டின் போது, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்வேதா நாராயணன், அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.