

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ வுமான க.பாண்டியராஜன், ஆவடி தொகுதியில் நேற்று பொது மக்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையிலான அணிக்கு எதிராக, முன்னாள் முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலை மையிலான அணியில் ஆவடி தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான க.பாண் டியராஜன் இடம்பெற்றிருந்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தற்போதைய அரசுக்கு எதிராக வாக்களித்தார். திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள 7 அதிமுக எம்எல்ஏக்களில், பாண்டிய ராஜனைத் தவிர மற்றவர்கள் சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இந்நிலையில், நேற்று ஆவடி தொகுதிக்கு வந்த க.பாண்டிய ராஜன், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துகளை கேட் டறிந்தார். முதலில் திருமுல்லை வாயிலில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
பொதுமக்களின் விருப்பத்தின் படி செயல்பட்டதாகக் கூறி அதிமுகவினரும், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் தெரிவித்ததாவது: எடப்பாடி பழனிசாமி தலை மையிலான அரசு, ஜெயலலி தாவின் அரசு அல்ல என்பதே ஆவடி தொகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு எதிரான தர்ம யுத்தம் தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கு எடுப்புக்கு அனுமதி அளிக் காதது ஜனநாயக படுகொலை. தமிழகமும், அதிமுகவும் ஒரு குடும்ப ஆட்சிக்குள் செல்லாமல் இருக்க அதிமுக தொண்டர்கள் எழுச்சியுடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவருக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.