சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஜனநாயக மரபுக்கு எதிரானது: திமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஜனநாயக மரபுக்கு எதிரானது: திமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றியது ஜன நாயக மரபுக்கு எதிரான செயல் என்று திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன் பழகன் குற்றம்சாட்டியுள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று நம் பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுக எம்எல்ஏக்கள் வலுக்கட் டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

பேரவையில் போலீஸ் உயர் அதிகாரிகளும், போலீஸாரும் திடீரென நுழைந்து திமுக எம்எல்ஏக் கள் ஒவ்வொருவராக அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்தனர். என்னை 20 போலீஸார் சுற்றிவளைத்து வெளியே இழுத்து வந்தனர். ஜனநாயக மரபுக்கு எதிரான இச்செயல் குறித்து ஆளுநரிடம் புகார் அளிப்போம்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறியதாவது:

நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த வாரம் நடத்த வேண்டும்; ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. பகல் 3 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். நாங்கள் அவையில் தான் இருந்தோம். 3 மணிக்கு முன் பாகவே எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றியது ஜனநாய கத்துக்கு எதிரான செயல்.

சபைக் காவலர்கள் வலுக்கட் டாயமாக வெளியேற்றியபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லினுக்கு காயம் ஏற்பட்டது. திமுக எம்எல்ஏ ஒருவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல எம்எல்ஏக்கள் காயமடைந்துள் ளனர்.

சொகுசு விடுதியில் தங்கி யிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு போய் மக் களைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேரவைத் தலை வரை வற்புறுத்தினோம். ஆனால், எங்கள் கட்சியினரை வெளியேற்றி விட்டு வாக்கெடுப்பு நடத்தி யுள்ளனர்.

சபைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காயம் ஏற்பட்டது. திமுக எம்எல்ஏ ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in