

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்க உள்ள நிலையில் சிவகாசியில் நோட்டுப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 25 சத வீதம் வரை விலை உயர்ந்துள்ளது. மேலும், கடைசி நேரத்தில் ஆர்டர் கள் குவிவதால் அச்சகங்கள் ஸ்தம்பித்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி யில் பட்டாசு உற்பத்தியைத் தொடர்ந்து உலக அளவில் பெயர் பெற்றது அச்சுத் தொழில். இத் தொழிலில் 2 லட்சத்துக்கும் அதிக மான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள னர். ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடியில் நோட்டுப் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கான நோட்டுப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி சிவகாசியில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மூலப் பொருட்கள் விலையேற்றம், காகிதம் தயாரிப்பில் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அச்சகங்களுக்கு உரிய மூலப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப் பாடு ஏற்பட்டது.
மேலும், காதித உற்பத்தி குறைவு, பற்றாக்குறை, அட்டைகள் விலை யேற்றம் காரணமாக நோட்டுப் புத்தகங்களின் விலை இந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், தொடக் கத்தில் அச்சகங்களுக்கு கல்வி நிறுவனங்கள் ஆர்டர் கொடுக்க தயங்கின. கடும் வறட்சி, தண் ணீர் பற்றாக்குறை போன்ற கார ணங்களால் போதிய அளவு காகிதம் உற்பத்தி எங்கும் இல்லை என்பதை உணர்ந்து தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்க சில நாட்களே உள்ள நிலையில் அச்சகங்களுக்கு ஆர்டர்களைக் குவிக்கத் தொடங்கியுள்ளன.
இதனால், அச்சகங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக விறுவிறுப்பாகப் பணியாற்றி வரு கின்றனர். ஆனாலும், கல்வி நிறு வனங்களுக்கு உரிய காலத்துக்குள் நோட்டுப் புத்தங்களை வழங்கு வதற்கு தாமதம் ஏற்படும் சூழ் நிலையும் உருவாகி உள்ளது.
இதுகுறித்து சிவகாசியில் நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கும் பிரபல அச்சக நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஸ்ரீனிவாசன் கூறும்போது, “காகித உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருள் மரம், தண்ணீர். ஆனால், அண்மைக் காலமாக மரங்கள் வெட்டப்படுவது பெருமளவில் குறைந்துள்ளது. தொடர் வறட்சி காரணமாக தண் ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள் ளது. இதனால், தமிழகத்தில் காகித உற்பத்தி பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் கரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித நிறுவனத்தில் இருந்து பெரும் அள வில் கொள்முதல் செய்து வந்தோம். ஆனால், அந்நிறுவனத்தில் தற் போது 60 சதவீத உற்பத்தி குறைந் துள்ளது.
இதனால், 90 சதவீதம் வெளி மாநிலங்களில் இருந்து காகிதங் களை வாங்க வேண்டிய சூழ்நிலை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. காகிதங்கள் மட்டுமின்றி அட்டை தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காகிதங்களுக்கான விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் நோட்டுப் புத்தகங்களின் உற்பத்தி செலவும் உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் ஆர்டர்கள் கொடுக்க தயங்கின. தற்போது, விலை குறைய வாய்ப்பு இல்லை என்பதாலும், பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளதாலும் ஆர்டர்கள் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால், நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்க காகிதங்கள் ஆர்டர் கொடுத்தால் உடனே கிடைப்ப தில்லை. குறைந்தது 40 முதல் 60 நாட்களுக்குப் பின்னரே கிடைக் கிறது.
சிவகாசியில் நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பு விறுவிறுப் பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இறுதி நேரத்தில் ஆர்டர்கள் குவிவதால் அச்சகங்கள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன” என்றார்.