

மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்திருப்பதாவது:
மத்திய வங்கக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களி லும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.