

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெண்களை பலாத்காரம் செய்த நிதி நிறுவன அதிபரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் சிவராஜ்(42). இவர் தன் நிதி நிறுவனத்துக்கு வரும் பெண்கள் சிலரை ஏமாற்றி அவர் களுடன் நெருக்கமாக இருந்துள் ளார். அதை செல்போன் மூலம் படம் பிடித்து, அதைக் கொண்டு மிரட்டியே அந்தப் பெண்களிடம் தொடர்ந்து சிவராஜ் தவறாக நடந்து வந்துள்ளார். இதில் மனமுடைந்த சில பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் சிவராஜின் தொடர் தொல்லைக்கு ஆளான பெண்கள் தருமபுரி காவல் கண்காணிப்பா ளர் லோகநாதன் கவனத்துக்கு விவ காரத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் குடும்பப் பிரச் சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட விவகாரத்தை மீண்டும் விசாரிக்க எஸ்.பி உத்தரவிட்டார். விசாரணை யில் பல பெண்களை மிரட்டி தன் விருப்பத்துக்கு இணங்க வைத்த தும், அவர்கள் வெளியில் தெரிவிக்க முடியாமல் தவித்ததும் தெரிய வந்தது. எனவே சிவராஜை திங்கள் கிழமை இரவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.