

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிவிட்டது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஜெயலலிதா மீதான வழக்கில் வந்துள்ள தீர்ப்பையடுத்து, தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமன்றி கடைகளை அடைக்க வேண்டும் என்று வியாபாரிகளை கட்டாயப்படுத்து வதாகவும் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு அமைப்பினர் மற்றும் சங்கத்தினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஏன் என்று புரியவில்லை.
தமிழகத்தில் இன்று (நேற்று) தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் பெருமள வில் பாதிக்கப்பட் டுள்ளனர்.
ஆம்னி பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். பண்டிகை நேரத்தில் இப்படிச் செய்வதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
ஜெயலலிதாவுக்காக பலர் தற்கொலை செய்து கொள்வதா கவும் செய்திகள் வருகின்றன. இவை யெல்லாம் வருத்தமளிக்கச் செய்கிறது.
தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. ஒரு அரசியல் தலைவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தொடரக்கூடாது. இது ஆபத்தான விஷயமாகும். அரசியல் தலைவர்களுக்காக பொது மக்களை துன்புறுத்தக் கூடாது.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறினார்.