நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 10 நாட்களில் சிசிடிவி கேமரா

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 10 நாட்களில் சிசிடிவி கேமரா
Updated on
1 min read

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மீதமுள்ள புறநகர் ரயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபடவுள்ளன என்று ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலைக்கு பிறகு ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.

ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில்தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து மின்சார ரயில் நிலையங் களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவுள்ளோம்.

முதல்கட்டமாக இன்னும் 7 முதல் 10 நாட்களில் நுங்கம்பாக்கத்தில் மொத்தம் 12 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவுள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in