குறைந்த வட்டியில் கடன்: மீனவர்களிடம் ப.சிதம்பரம் உறுதி

குறைந்த வட்டியில் கடன்: மீனவர்களிடம் ப.சிதம்பரம் உறுதி
Updated on
1 min read

மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அருகே மாளகிரியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில், மீனவர் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ரோவன் தல்மேதா, ராமநாதபுரம் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பாபா செந்தில், ராமநாதபுரம் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் மீனவப் பிரநிதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினர்.

அப்போது, விவசாயிகளுக்கு நிலப்பட்டாவை வைத்து வங்கிகளில் விவசாயக் கடன் வழங்குவது போல மீனவர்களுக்கும் விசைப்படகுகளின் பத்திரங்களையும் வைத்து வங்கிகளில் கடன் வழங்குவது, மீனவர்களுக்கு மாற்றுத் தொழில்களுக்கு கடன் அளிப்பது, மிகவும் பின்தங்கிய மீனவ கிராமங்களில் பொதுத்துறை வங்கிகளின் கிளைகளை அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்ட அமைச்சர் ப.சிதம்பரம், மீனவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் குறைந்த வட்டியில் மீனவர்கள் படகுகள், வலைகள், இதர தளவாடச் சாமன்கள் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் வழங்க பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in