Published : 26 Jan 2017 10:06 AM
Last Updated : 26 Jan 2017 10:06 AM

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை: சிபிஐ தகவலால் நீதிபதிகள் அதிருப்தி

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் இருவரை கைது செய்ய முடியவில்லை என சிபிஐ தெரிவித்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரையில் நாளிதழ் அலுவல கம் ஒன்றில் கடந்த 9.5.2007 அன்று பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ம் ஆண்டில் விடு தலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இதேபோல், சம்பவத்தில் உயிரிழந்த வினோத் என்பவரின் தாயார் பூங்கொடியும் மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

பிடிவாரண்ட்

இந்த மனுக்கள் மீதான விசார ணையை தாமதப்படுத்தியதால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக 5.2.2016-ல் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர் களில் 9 பேர் கைது செய்யப் பட்டனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோரை சிபிஐ போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் பி.மோகன் வாதிடும்போது, “பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள இருவர் 11 மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க முடியவில்லை” என்றார்.

‘சாதனையல்ல; கடமை’

இதையடுத்து, “தலைமறைவு குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை என சிபிஐ சொல்ல லாமா” என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது, “பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர் களில் 10 பேரை கைது செய்துள் ளோம்” என்றார் சிபிஐ வழக்கறி ஞர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “10 பேரை கைது செய்தது சாதனையல்ல; கடமை” என்றனர். பின்னர், “தலைமறைவாக இருக்கும் இருவரையும் கைது செய்ய அவகாசம் தர வேண்டும்” என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜாமீனுக்கு மறுப்பு

எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பர்ணபாஸ், என்.இளங்கோ வாதி டும்போது, “கைது செய்யப்பட்ட வர்களில் சிலர் ஜாமீனில் உள்ளனர். அவர்கள் உயர் நீதிமன்ற நிபந்தனையை கடைபிடித்து வருகின்றனர். மேலும் 4 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்றனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தப்பிடுவார்கள் என்ற நீதிபதிகள், விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x