

ஸ்ரீரங்கத்தில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில் தமிழக மாணவர் களுக்கு 45 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் சட்டத்துறை மேம்பாட்டுக்காக ரூ.2,661.47 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ரூ.1,660.27 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 223 புதிய நீதிமன்றங்கள் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற் காக ரூ.58.12 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில், தமிழக மாணவர்களுக்கு 45 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர, பிளஸ் 2 தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
2012 முதல் 2015-ம் ஆண்டு வரை பட்டப் படிப்புக்காக தேர்வு எழுதிய சிறைவாசிகள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். சிறைத்துறையின் நிர்வாக சீர்திருத்தத்துக்காக 672 முதல் நிலைக்காவலர், 349 தலைமைக் காவலர்கள். 95 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறைச் சாலைகளில் உள்ள தொழிற் கூடங்களின் உற்பத்தி மதிப்பு, 2015-16ல் ரூ.40.17 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2 தள கட்டிடத்தில், கூடுதலாக 3 தளங்கள் ரூ.8.69 கோடியில் கட்டப்படும். சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு ரூ.6.35 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட 15 நீதிபதிகள் பயன்பாட்டுக்காக 12 நீதிமன்ற அறைகள், 9 நீதிபதி அறைகள் ரூ.5.37 கோடியில் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை, காங்கேயம் மற்றும் ஆலந்தூரில் சார்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
சிறைச்சாலைகளில் பாது காப்பை பலப்படுத்த ரூ.80 லட்சம் செலவில் புதிதாக 380 வாக்கி டாக்கிகள் வழங்கப்படும். அவசர காலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறைப் பணியாளர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.