

இலங்கை அரசின் பிடியில் உள்ள 75 இந்திய மீன்பிடி படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரின் வஞ்சகமான, பழிவாங்கும் செய லால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி தங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், இன்னும் அந்த மீனவர்கள் இலங்கை சிறையில்தான் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், இலங்கை கடற்படை யால் பறி முதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 75 படகுகளும் அந்நாட்டு அரசின் பாதுகாப்பில் உள்ளன. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக் கக்கூடாது என்ற கடுமையான ஒரு நிலைப்பாட்டை இலங்கை கடற்படையினர் எடுத்துள்ளனர்.
மீன்பிடி படகுகள் விடுவிக்கப் படாததால் மீனவர்களின் வாழ்வா தாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்து கொண்டுசென்று விரைந்து தீர்வு காணுமாறு மீனவர் அமைப்பு களின் பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
மீன்பிடி படகுகள் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், வடகிழக்கு பருவமழை தொடங்க வுள்ள நிலையில், பராமரிப்பின்றி கிடக்கும் படகுகள் மேலும் மோசமாக சீரழிந்துவிடும்.
எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு, இலங்கை அரசின் பிடியில் உள்ள 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.