3 ஆண்டுகளில் நாட்டில் 50 புதிய விமான நிலையங்கள்: விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

3 ஆண்டுகளில் நாட்டில் 50 புதிய விமான நிலையங்கள்: விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் 50 புதிய விமான நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார்.

திருச்சியில் வ.வே.சு அய்யர் இல்லம், உலகப் போர் நினைவுச் சின்னம், காந்தி அஸ்தி மண்டபம், உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண் ஆகிய இடங்களில் நேற்று மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது:

விமான எரிபொருளுக்கான வரி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமாக உள்ளது. விமானங்களை இயக்கும்போது எரிபொருளுக்காக 40 சதவீதம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதைக் குறைத்தால்தான், அனைத் துத் தரப்பினரும் பயனடைவார் கள்.

எனவே, வரியை குறைக்கு மாறு அனைத்து மாநில முதல்வர் களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

சர்வதேச அளவில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிவேக வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2015-16ம் ஆண்டில் 20 சதவீத வளர்ச்சியைப் பெற் றுள்ளோம். இதே காலகட்டத்தில், சீனாவின் வளர்ச்சி 9 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இந்தியாவில் 32 விமான நிலை யங்களில் பயன்பாடின்றி உள் ளன. அதில், தமிழகத்தில் உள்ள சேலம் விமான நிலையமும் ஒன்று. இதனால், பல ஆயிரம் கோடி முதலீடுகள் வீணாகின்றன. எனவே, இவற்றைப் பயனுள்ள தாக மாற்றுவது குறித்து ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 50 விமான நிலையங் கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடங்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அனைத்து விமான நிலையங்களி லும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செய்தியாளர்களிடம் கூறும் போது, “வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நடுத்தர மக்களின் விமானப் போக்கு வரத்து குறைவாக உள்ளது. பிராந் திய அளவில் விமானப் போக்கு வரத்தை இணைப்பதற்கான ஏற் பாடுகள் நடந்து வருகின்றன” என்றார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் உள்ள, சுதந் திரப் போராட்டத் தியாகி நீல கண்ட பிரம்மச்சாரியின் இல்லத் துக்கு நேற்று சென்ற விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, அவரது படத்துக்கு மலர்கள் தூவி மரி யாதை செலுத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “காணாமல் போன விமானப்படை விமானத் தைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. காவிரி பிரச்சினை தொடர் பாக, தமிழக, கர்நாடக அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in