Published : 13 Oct 2014 09:44 AM
Last Updated : 13 Oct 2014 09:44 AM

கந்துவட்டி: தம்பதி கைது

பள்ளிக்கரணையில் கந்துவட்டி வசூலித்ததாக கணவன்-மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பள்ளிக்கரணை துலுக் காணத்தம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கல்யாணராமன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

அதே பகுதியில் தனம் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த கற்பகம்(39) என்பவர் 2011-ம் ஆண்டு கல்யாணராமன்-தமிழ்ச்செல்வி தம்பதியிடம் இருந்து ரூ.2.96 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளில் வாங்கினாராம்.

இதுவரை ரூ.6 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை திருப்பிச் செலுத்தியதாகவும், மேலும் ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கல்யாணராமன்-தமிழ்ச்செல்வி தம்பதி மிரட்டிய தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கற்பகம் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி கல்யாணராமன்-தமிழ்ச் செல்வி தம்பதியை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x