மனநல மருத்துவர் காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அக்டோபர் 31-ம் தேதி கடைசி

மனநல மருத்துவர் காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அக்டோபர் 31-ம் தேதி கடைசி
Updated on
1 min read

ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை களில் மனநல மருத்துவர் மற்றும் சமூக நலப் பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்காலிக பணிகளான இவற்றுக்கு அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உளவிய லாளருக்கான பணிகளும், கடலூர், கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட் டங்களில் சமூக நலப் பணியாளர் களுக்கான பணிகளும், விருது நகர், திண்டுக்கல், கரூர், புதுக் கோட்டை, சிவகங்கை, திருவண் ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உளவிய லாளர் மற்றும் சமூக நலப்பணி யாளர்களுக்கான பணிகளும் காலியாக உள்ளன.

உளவியலாளர் பணிக்கு விண் ணப்பிக்க மனநல உளவியலில் எம்.பில் (இள முனைவர் பட்டம்) அல்லது உளவியலில் முதுகலை மற்றும் 6 மாத காலம் துறை சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சமூக நலப்பணியாளர் பணிக்கு சமூகநலப்பணி மனநலம் (Master of social Work-MSW-Medical & Psychiatry) அல்லது சமூக நலப் பணி மனநலத்தில் முதுகலை (M.A.- Social Work Medical & Psychiatry) பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு வயது வரம்பு இல்லை. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உளவியலாளருக்கு மாத தொகுப்பூதியம் ரூ.13,000 மற்றும் சமூக நல பணியாளருக்கு ரூ.10,000 வழங்கப்படும். பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, சொந்த மாவட்டம், அட்டெஸ்ட் செய்யப் பட்ட சான்றிதழ் நகல்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி உள்ளிட் டவைகளை குறிப்பிட்டு அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், (மாவட்ட மனநலத் திட்டம்) (தொகுப்பூதிய பணித்திட்ட), டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6.

இப்பணிகளில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in